திருநகர் : மதுரை தனக்கன்குளம் திருவள்ளுவர்நகர் ஆக்மி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில்27வது தேசிய எழுவர் கால்பந்து போட்டிகள் துவங்கின.
நாக்அவுட் முறையில் நடக்கும் போட்டிகளில் தமிழகம், கேரளா உள்ளிட்ட 7 மாநிலங்களிலிருந்து 64 அணிகள் பங்கேற்கின்றன. பகலில் ஏழு, இரவில் ஐந்து போட்டிகள் நடக்கின்றன.முதல் போட்டியில் திருவள்ளுவர்நகர் மாணிக்கம் அய்யா கால்பந்து குழு 1-0 கோல் வித்தியாசத்தில் டினோபிலி அணியை வென்றது. 2வது போட்டியில் டி.வி.எஸ். கால்பந்து கிளப் 2-0 கோல் வித்தியாசத்தில் பாரத் கால்பந்து அணியை வென்றது.
3வது போட்டியில் திண்டுக்கல் யுனைடெட் கால்பந்து கழகம் 7-3 கோல் வித்தியாசத்தில் டான் பாஸ்கோ அணியை வென்றது. 4வது போட்டியில் திருவள்ளுவர் ஆக்மி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 5-1 என்ற கோல் வித்தியாசத்தில் ஏரான் அணியை வென்றது. 5வது போட்டியில் திருவள்ளுவர் நகர் கார்த்திகேயன் கால் பந்தாட்ட குழு 2-0 கோல் வித்தியாசத்தில் பசுமலை கால்பந்தாட்ட குழுவை வென்றது. 6வது போட்டியில் கருப்பையா கால்பந்தாட்ட குழு 3-1 கோல் வித்தியாசத்தில் திருப்பரங்குன்றம் பாலு கால்பந்தாட்ட குழு அணியை வென்றது. 7வது போட்டியில் ஆர்.சி.சி., கால்பந்தாட்ட அணி 3-0 கோல் வித்தியாசத்தில் கில்ஸ் அணியை வென்றது.
8வது போட்டியில் தேனி எஸ்.டி., முருகேசன் அணி 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் உசிலை அணியை வென்றது. 9வது போட்டியில் திருவள்ளுவர் நகர் ஆர்.ஆர்.ஆர்.கே., அணி 4-0 கோல் வித்தியாசத்தில் உச்சப்பட்டி அணியை வென்றது. ஜன., 18 வரை போட்டிகள் நடக்கின்றன. கிளப் நிர்வாகிககள் சீனிவாசன், சரவணராஜன், ராஜூ, விஜயன் போட்டி ஏற்பாடுகளை செய்துஉள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE