திருத்தணி - திருத்தணி முருகன் கோவிலில், ராஜகோபுரத்திற்கு அமைப்பதில் நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது.திருத்தணி முருகன் கோவிலில், 2009ம் ஆண்டு, நவ., 18ல், ஹிந்து அறநிலையத்துறை அனுமதியுடன், ஒன்பது நிலை ராஜகோபுரம் கட்டும் பணி துவங்கியது.பல்வேறு தடைகள் மீறி, ராஜகோபுரம், 25 அடிக்கு அமைக்கப்பட்டது. 11 அடிக்கு கல்ஹாரம், 122 அடி உயர கோபுரம், 2019ம் ஆண்டு, டிசம்பர் மாதம் முடிக்கப்பட்டது. ராஜகோபுரத்தின் ஒன்பது நிலைகள் கட்டப்பட்டு, சிற்பங்கள் ஏற்படுத்தி வண்ணம் தீட்டும் பணி நிறைவடைந்தது.ஆனால், ராஜகோபுரத்திற்கும், தேர் வீதிக்கும் இணைக்கும் இணைப்பு படிகள் அமைக்கும் பணிகள் துவங்காமல் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.இணைப்பு படிகள் அமைக்காததால், ராஜகோபுரத்தின் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி தள்ளிப் போகிறது.இது குறித்து, கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ராஜகோபுரத்தில் இருந்து, தேர் வீதிக்கு, மொத்தம், 45 படிகள் அமைக்கப்பட வேண்டும். இந்த படிகள் அமைக்க, 69 லட்சம் ரூபாய் செலவாகும் என, திட்ட மதிப்பீடு தயார் செய்து, ஹிந்து அறநிலையத் துறை ஆணையர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளது.மேலும், மாவட்ட அளவிலான கமிட்டி, உயர் நீதிமன்ற உயர்மட்ட கமிட்டி ஆகியோர் ஒப்புதல் கிடைத்தவுடன், டெண்டர் விட்டு, மூன்று மாதத்திற்குள், படிகள் அமைத்து முடித்து, கும்பாபிஷேகம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE