பொது செய்தி

தமிழ்நாடு

விரிவாக்கம் செய்தும் பயனில்லை:

Added : ஜன 14, 2021
Share
Advertisement
கும்மிடிப்பூண்டி - கும்மிடிப்பூண்டி, ஜி.என்.டி., சாலையை விரிவாக்கம் செய்தும், போக்குவரத்து கடுமையாக பாதிக்கும் அளவிற்கு, நடைபாதை மற்றும் சாலையோர கடைகள், சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து உள்ளன.கும்மிடிப்பூண்டி அடுத்த, பெத்திக்குப்பம் ரயில்வே மேம்பாலம் முதல், கும்மிடிப்பூண்டி, பஜார் வீதி வழியாக, கன்னியம்மன் கோவில், ரயில்வே மேம்பாலம் வரையிலான, 6.6 கி.மீ.,- ஜி.என்.டி.,

கும்மிடிப்பூண்டி - கும்மிடிப்பூண்டி, ஜி.என்.டி., சாலையை விரிவாக்கம் செய்தும், போக்குவரத்து கடுமையாக பாதிக்கும் அளவிற்கு, நடைபாதை மற்றும் சாலையோர கடைகள், சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து உள்ளன.கும்மிடிப்பூண்டி அடுத்த, பெத்திக்குப்பம் ரயில்வே மேம்பாலம் முதல், கும்மிடிப்பூண்டி, பஜார் வீதி வழியாக, கன்னியம்மன் கோவில், ரயில்வே மேம்பாலம் வரையிலான, 6.6 கி.மீ.,- ஜி.என்.டி., சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறையினர் பராமரிப்பில் உள்ளது.இந்த சாலையில் ஏற்பட்டு வந்த, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், நான்கு வழி சாலையாக மாற்றும் பணிகளுக்காக, 17.42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 2019ம் ஆண்டு, ஜூன் மாதம் பணிகள் முடிக்கப்பட்டன.அதன்பின், சாலையோர ஆக்கிரமிப்புகளை, மாநில நெடுஞ்சாலைத் துறையினர் கட்டுப்படுத்த தவறியதால், விரிவாக்கம் செய்த பகுதி முழுவதையும், சாலையோர கடைகள் ஆக்கிரமித்தன.கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி, தற்போது, மீண்டும் இரு வழி சாலையாக மாறியதால், விரிவாக்கம் செய்தும் பயனின்றி போனது.கும்மிடிப்பூண்டி நகருக்குள் இயக்கப்பட்ட அரசு விரைவு பஸ் சேவைகள், போக்குவரத்து நெரிசல் காரணமாக, புறவழிச்சாலை வழியாக இயக்கப்படுகின்றன.பெத்திக்குப்பம் மேம்பாலம் முதல், கன்னியம்மன் கோவில் மேம்பாலம் வரையிலான சாலையோர ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.பழையபடி அரசு விரைவு பஸ்கள், நகருக்குள் வந்து செல்ல, போலீசாரும், பேரூராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலை துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும்.போக்குவரத்து நெரிசல் இல்லாத கும்மிடிப்பூண்டி, ஜி.என்.டி., சாலையை ஏற்படுத்த, துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கும்மிடிப்பூண்டி பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X