ஊத்துக்கோட்டை - போகி பண்டிகையையொட்டி, பழைய பொருட்களை எரித்து, சிறுவர், சிறுமியர் மேளம் அடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகி பண்டிகையாக, தமிழர்கள் கொண்டுவர். நேற்று, போகி பண்டிகையையொட்டி, ஊத்துக்கோட்டை மற்றம் சுற்றியுள்ள பகுதிகளில், ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பழைய பொருட்களை போட்டு, தீயிட்டு மகிழ்ந்து கொண்டாடினர்.சிறுவர், சிறுமியர் எரியும் நெருப்பை சுற்றி அமர்ந்தும், நின்று கொண்டும் மேளம் அடித்து, மிகழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.இதேபோல், மாவட்டம் முழுதும் மக்கள் போகி பண்டிகையை கொண்டாடினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE