திருவள்ளூர் - ''திருவள்ளூர் மாவட்டத்தில், வரும், 16ம் தேதி, 26 ஆயிரத்து, 330 பேருக்கு, 'கோவிட் - 19' தடுப்பூசி போடப்படும்,'' என, கலெக்டர் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில், வரும், 16ம் தேதி, 'கோவிட் -- -19' தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதற்காக, மாவட்ட சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்தில், குளிர்சாதன இயந்திரங்களில், சேமித்து வைக்கப்பட்டுள்ள, 'கோவிட் - -19' தடுப்பூசி மருந்துகளை,
கலெக்டர் பொன்னையா நேற்று, நேரில் சென்று பார்வையிட்டார்.பின், செய்தியாளர்களிடம், அவர் கூறுகையில், 'திருவள்ளூர் மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவ ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர் என, 26 ஆயிரத்து, 330 பேருக்கு, 'கோவிட் - -19' தடுப்பூசி வழங்கப்பட உள்ளது,' என்றார்.நிகழ்ச்சியில், சுகாதார துணை இயக்குனர் ஜவஹர்லால், உதவி திட்ட மேலாளர் மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE