திருத்தணி; கொரோனா தொற்று காரணமாக, வரும், 16ம் தேதி, காணும் பொங்கல் தினத்தன்று, உற்சவர் முருகப் பெருமான், திருத்தணி நகர வீதிகளில், வீதியுலா வரும் நிகழ்ச்சி, ரத்து செய்யப்பட்டு உள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை தினம் உற்சவர் முருகப் பெருமான் மலைக்கோவிலில் பின்புறம் உள்ள குருக்கள் மற்றும் அர்ச்சகர் வசிக்கும் பகுதிகளில் உள்ள வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.மறுநாள், மாட்டுப்பொங்கல் தினத்தன்று, மேல் திருத்தணியிலும், காணும் பொங்கல் நாளில், திருத்தணி நகரத்திலும் உற்சவர் முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.இந்நிலையில், நடப்பாண்டு, இன்று, பொங்கல் விழா, நாளை, மாட்டுப்பொங்கல், நாளை மறுநாள் காணும் பொங்கல் ஆகிய நாட்களில் கொரோனா தொற்று காரணமாக உற்சவர் முருகப் பெருமான் வீதியுலா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது என, கோவில் நிர்வாகம் தெரிவித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE