காஞ்சிபுரம் - காஞ்சிபுரத்தில் சாப்பாட்டு அரிசி விலை வீழ்ச்சியடைந்து கிலோவுக்கு, 14 ரூபாய் வரை குறைந்துள்ளது. இருப்பினும், இட்லி அரிசி விலை உயர்ந்துள்ளது.இது குறித்து, காஞ்சிபுரம், சர்வதீர்த்தகுளம் பகுதியைச் சேர்ந்த அரிசி கடை உரிமையாளர் எஸ்.ஆனந்தகுமார் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டத்திலும், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சுற்று வட்டாரத்திலும், அதிசய பொன்னி, எராமல்லி, பாபட்லா, இட்லி அரிசி எனப்படும் குண்டு ரக நெல் பயிரிடப்படுகிறது.இதில், சாப்பாட்டு அரிசி ரகங்கள், ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேச மாநிலங்களில் இருந்து காஞ்சிபுரத்திற்கு, வரத்து அதிகரித்து உள்ளது.இதனால், சாப்பாட்டு அரிசி கிலோவுக்கு, 14 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. கடந்த மாதம், அதிசய பொன்னி, சாப்பாட்டு அரிசி, 25 கிலோ எடை உடைய ஒரு சிப்பம், 800 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது, 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.இருப்பினும், இட்லி அரிசி எனப்படும் குண்டு அரிசி வரத்து குறைந்துள்ளதால், கிலோவுக்கு, 4 ரூபாயும், முதல் தரமான சீரகசம்பா அரிசி, 28 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.கடந்த, 12 ஆண்டுகளுக்கு பின், காஞ்சிபுரத்தில் சாப்பாட்டு அரிசி விலை வீழ்ச்சியடைந்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.அரிசி வகை கிலோ கடந்த மாத விலை நேற்றைய விலைஅதிசயப்பொன்னி 28 20எராமல்லி 48 35பாபட்லா 44 30இட்லி அரிசி 24 28சீரகசம்பா 72 100
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE