பார்வேட்டை உற்சவம் ரத்துமாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும், பார்வேட்டை உற்சவம் குறிப்பிடத்தக்கது.காணும் பொங்கலன்று, சுவாமி, கோவிலிலிருந்து புறப்பட்டு, பெருமாளேரி, வடகடம்பாடி, காரணை உள்ளிட்ட கிராமங்கள் வழியே, உலா சென்று, குழிப்பாந்தண்டலம், லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், பார்வேட்டை உற்சவம் நடைபெறும்.கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு கருதி, தற்போது, உற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.அதேபோல், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு, பழையசீவரம் கிராமத்தில் நடக்கும் பார்வேட்டை உற்சவமும் ரத்து செய்யப்பட்டது.மாணவர்கள் கவுரவிப்புஉத்திரமேரூர் : உத்திரமேரூர் அடுத்த காக்கநல்லுாரில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், கோதண்டராம நீல பக்த பஜனை சபா சார்பில், மார்கழி மாதம் முழுவதும், தினமும் மாலை நேரத்தில் பஜனை நடந்தது.பஜனையில் ஹார்மோனியம், மிருதங்கம் உள்ளிட்ட இசைக்கருவிகளை வாசித்த மாணவர்கள், பக்தி பாடல்களை பாடிய மாணவ - மாணவியரை கவுரவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில், மாணவ - மாணவியருக்கு, வேட்டி, துண்டு, போகி மேளம், பேனா, பென்சில், இனிப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE