பொது செய்தி

இந்தியா

ஆன்லைன் வகுப்புகள், மாணவ - மாணவியரின் நடவடிக்கையில், மாற்றம்

Added : ஜன 14, 2021
Share
Advertisement
பெங்களூரு - ஆன்லைன் வகுப்புகள், மாணவ - மாணவியரின் நடவடிக்கையில், மாற்றம் ஏற்படுத்தியுள்ளது. வகுப்பு இல்லாத நேரத்திலும், பிள்ளைகள் மொபைல் போனில் மூழ்கியிருப்பது, பெற்றோருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவில், கொரோனா பரவாமல் தடுக்க, ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டிருந்தது. இந்த தொற்று, மனிதர்களுக்கு ஏற்படுத்திய பாதிப்பை,

பெங்களூரு - ஆன்லைன் வகுப்புகள், மாணவ - மாணவியரின் நடவடிக்கையில், மாற்றம் ஏற்படுத்தியுள்ளது. வகுப்பு இல்லாத நேரத்திலும், பிள்ளைகள் மொபைல் போனில் மூழ்கியிருப்பது, பெற்றோருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவில், கொரோனா பரவாமல் தடுக்க, ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டிருந்தது. இந்த தொற்று, மனிதர்களுக்கு ஏற்படுத்திய பாதிப்பை, வார்த்தைகளால் விவரிக்க முடியாது.மாணவர்களுக்காக, ஆன்லைன் வகுப்புகள் நடக்கிறது. பல மாதங்கள் வீட்டிலேயே, பொழுதை கழித்த பிள்ளைகளின் மனநிலையில், மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிறு விஷயத்துக்கும், பெற்றோர் மீது எரிந்து விழுகின்றனர். கோபப்படுகின்றனர். இதனால், பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.கிராமப்பகுதி மாணவர்கள், விவசாயம் மற்றும் சேர்ந்து விளையாடுவது என, சுறுசுறுப்புடன் செயல்படுகின்றனர். இதனால் அவர்களிடம், அவ்வளவாக மாற்றம் தென்படவில்லை.நகரப்பகுதி மாணவர்களிடம் பிரச்னை தென்படுகிறது. வேலையில் உள்ள தம்பதியருக்கு, தங்கள் பிள்ளைகளின் மனப்போக்கு, தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.ஆன்லைன் வகுப்புகளுக்கு, உதவியாக இருக்க வேண்டும் என நினைத்து, அனைத்து வசதிகளும் கொண்ட, விலை உயர்ந்த ஆன்ட்ராய்டு மொபைல் போன், மடிக்கணினி வாங்கிக்கொடுத்தனர்.ஆன்லைன் வகுப்பு முடிந்த பின்னும், பிள்ளைகள் மொபைல் போனில் மூழ்கியுள்ளனர். இரவு முழுவதும், நண்பர்களுடன் சாட்டிங் செய்கின்றனர். வீட்டில் யாரும் இல்லாத போது, ஆபாச படங்கள், வீடியோ பார்க்கின்றனர்.இரவு முழுவதும் சாட்டிங் செய்வதால், காலையில் தாமதமாக எழுகின்றனர். படிக்கும்படி பெற்றோர் கூறினால், அலட்சியப்படுத்துகின்றனர். முரட்டுத்தனம் அதிகரித்துள்ளது.இதனால் வருத்தமடைந்த பெற்றோர், மனவியல் வல்லுனர்களின் உதவியை நாடுகின்றனர். இதற்காகவே, சில தனியார் பள்ளிகள், மனவியல் வல்லுனர்களை நியமித்து, பிள்ளைகளுக்கு கவுன்சலிங் கொடுக்கின்றனர்.மனநல வல்லுனர் தாண்டவ மூர்த்தி கூறியதாவது:வீட்டில் தந்தை, தாய் இருவரும் பணிக்கு செல்பவராக இருந்தால், பிரச்னை அதிகம். பிள்ளைகள் தனியாக இருப்பர். அப்போது கையில் மொபைல் இருந்தால், பலவிதமான ஆலோசனை வரும்.ஒருமுறை பார்த்ததை, மீண்டும் பார்க்க தோன்றும். டீனேஜ் பிள்ளைகளின் உடலில், ஹார்மோன் மாற்றம் ஏற்படும். மொபைல் போன் பயன்படுத்தும் பிள்ளைகளின் மூளை, கண்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். இது போன்ற காரணங்களால், பிள்ளைகள் கோபப்படுவர். பெற்றோரிடம் எரிந்து விழுவர். அவர்களின் பேச்சை மதிக்க மாட்டார்கள்.பிள்ளைகளின் கோபத்தை, பெற்றோர் குற்றமாக கருதக்கூடாது. பொறுமையுடன் நடந்து, அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும்.ஒருவேளை பிள்ளைகளை மிரட்டினால், அவமதித்தால் அவர்கள் மோசமாக யோசிக்கலாம். பிள்ளைகளை அருகில் அமர்த்தி, அன்புடன் பேசி, இந்த வயதில் ஏற்படும் மாற்றம், அதனால் உருவாகும் அபாயத்தை விவரித்து, புரிய வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X