பெங்களூரு - இம்முறை துாய்மை ஆய்வில், 'நல்ல ரேங்கிங்' பெற, பெங்களூரு மாநகராட்சி, திட்டம் வகுத்துள்ளது. இதற்காக, துாய்மை மற்றும் அபிவிருத்தி பணிகள் மேற்கொண்டுள்ளது.மத்திய அரசு, 'துாய்மை இந்தியா' திட்டத்தில், ஆண்டு தோறும் அந்தந்த மாநிலங்களில், ஆய்வு செய்து, துாய்மையான நகரங்களுக்கு, விருது வழங்கி கவுரவித்து, ஊக்கப்படுத்துகிறது.ஒவ்வொரு ஆண்டும், துாய்மை ரேங்கிங் பெற, பெங்களூரு மாநகராட்சி முயற்சிக்கிறது. ஆனால் பயனில்லை. 2019ல், 194வது இடம்; 2020ல், 214வது இடத்தில் வந்தது. இம்முறை நல்ல ரேங்கிங், பெற்றே ஆக வேண்டுமென, உறுதி பூண்டுள்ளது.ஏற்கனவே, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், பெங்களூரின் பல இடங்களில், சாலை அபிவிருத்தி பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் முடிந்த பின், நகரம் அழகாக காட்சி அளிக்கும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.மற்றொரு பக்கம், குப்பையில்லா நகராக்கவும், பல திட்டங்களை வகுத்துள்ளது. ஏற்கனவே துாய்மை ஆய்வு, துவங்கப்பட்டுள்ளது. மக்களிடம் கருத்து சேகரிக்கப்படுகிறது.நகரை துாய்மை நகராக்குவதில், பெங்களூரு குடிநீர் வாரியமும், மாநகராட்சியுடன் கை கோர்த்துள்ளது.பொது கழிப்பறைகள், நடைபாதைகள், குப்பை அள்ளுவது என, மற்ற விஷயங்கள் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE