மைசூரு - எச்.டி.கோட்டே பள்ளே வளர்ப்பு யானைகள் முகாம், மகிழ்ச்சியில் திளைக்கிறது. இந்த முகாமுக்கு, இன்னும் சில மாதங்களில், புதிய விருந்தினர் வருகிறார்.மைசூரு மாவட்டம், எச்.டி.கோட்டே யானைகள் முகாமில் உள்ள, பெண் யானை, துர்கா பரமேஸ்வரி, கர்ப்பம் தரித்துள்ளது. இன்னும் ஏழெட்டு மாதங்களில், குட்டி போடும். இதற்கு பிறக்கும் குட்டிக்கு, அர்ஜூனா யானையே தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.துர்கா பரமேஸ்வரி யானைக்கு, சிறந்த ஊட்டச்சத்தான உணவு வழங்கி, பராமரிக்கப்படுகிறது. அர்ஜூனா அருகிலேயே உள்ளது.தசராவில், 750 கிலோ தங்க அம்பாரியை சுமந்து, வெற்றி நடை போட்ட, யானை அர்ஜூனாவுக்கு, 60 வயதானாலும், அதே கம்பீரத்துடன் உள்ளது.மைசூரு தசராவில், 10 ஆண்டு தங்க அம்பாரியை சுமந்த அர்ஜூனாவுக்கு, 60 வயதானதால், 2020ல் ஓய்வு கொடுக்கப்பட்டது. தற்போது, பள்ளே முகாமில் உள்ளது. சுற்றுலா பயணியர், இந்த யானையை விரும்பி பார்க்கின்றனர்.புலிகளை பிடிக்கவும்; ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை, காட்டுக்குள் விரட்டவும் அர்ஜூனா பயன்படுத்தப்படுகிறது.வளர்ப்பு யானை முகாம்களில், யானை குட்டிகள் பிறப்பது புதிய விஷயமல்ல. ஆனால் பள்ளே முகாமில், அர்ஜூனாவுக்கு, குட்டி பிறக்கிறது என்பதே சிறப்பு என, வனத்துறை அதிகாரிகள், பாகன்கள் தெரிவித்துள்ளனர்..
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE