மைசூரு - ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட, சாமுண்டீஸ்வரியின், உற்சவ மூர்த்தியை, ரதத்தின் மீது அமர்த்த, லிப்ட் தயாராகிறது.மைசூரு சாமுண்டி மலையின், சாமுண்டீஸ்வரி தேவி கோவில், வரலாற்று பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், வருகை தருகின்றனர். கொரோனா பரவுவதற்கு முன், லட்சக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணியர் வருகை தந்தனர்.சாமுண்டீஸ்வரி கோவிலில், ரத உற்சவம் நடக்கும் போது, 25 முதல் 40 அடி வரையிலான, உயரமுள்ள ரதத்தின் மீது, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்தி, வைக்கப்படும்.உற்சவ மூர்த்தியை, பாதுகாப்பாக, ரதத்தில் அமர்த்த, மைசூரு மஹாராஜாக்கள் காலத்தில், மரத்தினால் ஆன, 'லிப்ட்' பயன்படுத்தப்பட்டது.ஆனால், அது மிகவும் பழையதாகிவிட்டதால், ஒவ்வொரு முறை ரத உற்சவத்தின் போது, லிப்டை பழுது பார்த்து, பயன்படுத்த வேண்டியுள்ளது.எனவே, புதிதாக லிப்ட் தயாரிக்க, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி, தென் மேற்கு ரயில்வேத்துறையின், சி.டபிள்யூ.எம்., சென்ட்ரல் ஒர்க்ஷாப்பில், 5.20 லட்சம் ரூபாய் செலவில், 'புதிய இரும்பு லிப்ட்' தயாரித்துள்ளது.இப்புதிய லிப்ட், 300 கிலோ எடையை, மேலே துாக்கும் திறன் கொண்டுள்ளது. இது, ஐந்து முதல் ஆறு டன் எடை; நான்கு சக்கரங்கள் கொண்டது. ஒரு இடத்திலிருந்து, வேறு இடத்துக்கு இரும்பு லிப்டை, இழுத்து செல்லலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE