சிக்கமகளூரு = மாணவர் வருகை குறைந்து வருவதால், மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள, அரசு முதன்மை தொடக்க ஆண்கள் பள்ளியை காப்பாற்ற, சமூக வலைதளத்தில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.சிக்கமகளூரு மாவட்டம், சிருங்கேரியிலுள்ள மல்லிகார்ஜுனா தெருவில், அரசு முதன்மை தொடக்க ஆண்கள் பள்ளி உள்ளது.இப்பள்ளி, 1853ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தாலுகாவில் திறக்கப்பட்ட முதல் அரசு பள்ளி. 1970 - 1980 வரையில், 800 - 1,000 மாணவர்கள் படித்து வந்தனர்.தற்போது, 2019 - 2020 கல்வியாண்டில், முதல் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பு வரை, 14 மாணவர்கள் மட்டுமே உள்ளனர். இங்கு ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனி அறைகள் உள்ளன. மாணவர் எண்ணிக்கை குறைவால், இரண்டு அறைகளில் மட்டும் பாடம் நடத்தப்படுகிறது.இப்பகுதியை சேர்ந்தவர்களும், மாணவர்களின் பெற்றோரும் பள்ளியை தொடர்ந்து நடத்த, சமூக வலை தளங்களில் கல்வி துறையினரை வலியுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE