சந்தன மரங்களை திருடிய, நான்கு பேர் கைது

Added : ஜன 14, 2021
Share
Advertisement
மைசூரு - சந்தன மரங்களை திருடிய, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். 5.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 46 சந்தன மரத்துண்டுகள், பறிமுதல் செய்யப்பட்டது.கர்நாடகாவின், அரண்மனை நகரான மைசூரு நகரில், சமீப நாட்களாக சந்தன மரங்கள் திருடும் சம்பவங்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சில நாட்களுக்கு முன், கே.சி.லே - அவுட்டின், பிரதான சாலையில், நஜர்பாத் போலீசார், ரோந்துப்பணியில்

மைசூரு - சந்தன மரங்களை திருடிய, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். 5.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 46 சந்தன மரத்துண்டுகள், பறிமுதல் செய்யப்பட்டது.கர்நாடகாவின், அரண்மனை நகரான மைசூரு நகரில், சமீப நாட்களாக சந்தன மரங்கள் திருடும் சம்பவங்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சில நாட்களுக்கு முன், கே.சி.லே - அவுட்டின், பிரதான சாலையில், நஜர்பாத் போலீசார், ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நான்கு பேரை, விசாரித்தனர்.சந்தன மரம் திருடர்கள் என்பது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, காவல் நிலையம், அழைத்து சென்றனர். தமிழகம், ஈரோடு மாவட்டத்தின் பூபதி, 24, செந்தில்குமார், 38, பிரான்சிஸ், பிரவீன் குமார், 20, என்பது விசாரணையில் தெரிந்தது.ரோஹில் என்பவர், தப்பியோடி விட்டார். இவரை தேடுகின்றனர். இவரது மனைவி, மைசூரை சேர்ந்தவர்.ரோஹில், தன் கூட்டாளிகள் நால்வருடன், பகல் நேரத்தில், மைசூரு நகரின் வெவ்வேறு இடங்களில், சுற்றி வந்து அரசு அலுவலகங்கள், ஆள் நடமாட்டமில்லா இடங்களில், வளர்ந்துள்ள சந்தன மரங்களை நோட்டம் விடுவர்.இரவில் மரம் வெட்டும் இயந்திரத்துடன், அங்கு சென்று, சந்தன மரத்தை வெட்டி திருடி செல்வர். சந்தன மரத்துண்டுகளை, தமிழகத்துக்கு கொண்டு சென்று, விற்பனை செய்து வந்தனர்.இவர்கள் மீது அசோக்புரம், ஜெயலட்சுமிபுரம், லட்சுமிபுரம் உட்பட, வெவ்வேறு காவல் நிலையங்களில், வழக்கு பதிவாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X