மைசூரு - மைசூரின் கே.ஆர்.நகர் சட்டசபை தொகுதியில், செல்வாக்கு மிக்க தலைவர் ஜி.டி.தேவகவுடா மகன் ஹரிஷ் கவுடா, கண் வைத்திருப்பது, ம.ஜ.த., வில் சலசலப்பை ஏற்படுத்தியது.மைசூரின் கே.ஆர்.நகர் தொகுதியில், ம.ஜ.த.,வின் சா.ரா.மகேஷ், மூன்று முறை வெற்றி பெற்றதன் மூலம், கட்சியை ஆழமாக வேரூன்ற வைத்துள்ளார். தற்போது சூழ்நிலை மாறியுள்ளது.பழைய மைசூரு பகுதியில், ம.ஜ.த.,வின் செல்வாக்கு மிக்க தலைவர், ஜி.டி.தேவகவுடா, கட்சியிலிருந்து விலகாமல், விலகி நிற்கிறார். இதனால் கட்சிக்கு பலத்த அடி ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், அவரது மகன் ஹரிஷ், கே.ஆர்.நகர் சட்டசபை தொகுதியில், அடுத்த தேர்தலில் போட்டியிட ஆர்வம் காண்பிக்கிறார். தொகுதியில் செல்வாக்கை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.இதனால் ம.ஜ.த.,வில் சலசலப்பு எழுந்துள்ளது. தன் பாதுகாப்பு கோட்டையான தொகுதியை, சா.ரா.மகேஷ் விட்டுக்கொடுப்பாரா என்ற கேள்வியெழுந்துள்ளது.மற்றொரு பக்கம், ஜி.டி.தேவகவுடாவை, கட்சியிலிருந்து நீக்க, ம.ஜ.த.,மேலிடம் ஆலோசிப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பொருட்படுத்தாமல், தொகுதியில் தன்னை, நிலை நிறுத்துவதில் ஈடுபட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE