பெங்களூரு:பயணியர் வசதிக்காக, பெங்களூரின் ஏழு இடங்களில், நடை மேம்பாலம் கட்ட, பி.எம்.ஆர்.சி.எல்., முடிவு செய்துள்ளது.மெட்ரோ ரயில்களில் வந்திறங்கி, அக்கம், பக்கத்தில் உள்ள, பஸ் நிலையம், ரயில் நிலையங்களுக்கு செல்வதற்கு, பயணியர், கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை.அவர்களின் வசதிக்காக, நடை மேம்பாலம் கட்ட, பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் திட்டமிட்டுள்ளது.இன்னும் சில மாதங்களில், நடைமேம்பாலங்கள், மக்களின் பயன்பாட்டுக்கு நடைமுறைக்கு வரும். முதற்கட்டமாக, பெங்களூரு, யஷ்வந்த்பூர் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து, நேரடியாக, யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்துக்கு, இணைப்பு ஏற்படுத்தும், நடை மேம்பாலம் அமைக்கப்படும். சில நாட்களில் பணிகள் துவங்குகிறது.மெட்ரோ பொது தொடர்பு அதிகாரி யஷ்வந்த் சவுஹான் கூறியதாவது:யஷ்வந்த்பூரில் அமைக்கப்படும், நடை மேம்பாலம், பயணியருக்கு உதவியாக இருக்கும். ஆறாவது பிளாட்பாரத்துக்கும், யஷ்வந்த்பூர் மார்க்கெட் அருகில் உள்ள, ரயில் நிலையத்தின், பிரதான நுழை வாசலுக்கும், மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து, நேரடி தொடர்பு ஏற்படுத்தப்படும்.இதே போன்று, மேலும் ஆறு இடங்களில் அமைக்கப்படும் நடை மேம்பாலங்கள், மெட்ரோ நிலையத்தின், அக்கம், பக்கத்தில் உள்ள பஸ், ரயில் நிலையங்களுக்கும், மற்ற பகுதிகளுக்கும் தொடர்பு ஏற்படுத்தும்.நடை மேம்பாலங்கள் கட்ட, 12.50 கோடி ரூபாய் செலவில், டெண்டர் கோரப்பட்டுள்ளது. இரும்பால் கட்டப்படும், நடை மேம்பாலங்கள், வயதானவர்கள், பிள்ளைகள், அதிக லக்கேஜ்களை சுமந்து வரும் பயணியருக்கு, அனுகூலமாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE