பெங்களூரு; பெங்களூரின் பெரிய சாலைகளின் மேற்பகுதியில், கன்னடம், ஆங்கில மொழியில், அனைவருக்கும் தெரியும்படி, சாலை பெயர்களை எழுத, பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:பெங்களூரு உலகத்தரம் வாய்ந்த நகர் என்பதால், வெளி மாநிலம், வெளிநாடுகளிலிருந்து, லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். இவர்கள் சாலைகளின் பெயர்களை, தெரிந்து கொள்ள முடியாமல், தேடி அலைய வேண்டியுள்ளது.இதற்கு தீர்வு காணும் வகையில், சாலைகளின் மேற்பகுதியில், கன்னடம், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும், சாலைகளின் பெயர்களை எழுத, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சாலைகள் மீது, பெரிய எழுத்துகளில், பெயர் எழுதுவதற்கு வெள்ளை, மஞ்சள் நிற பெயின்ட் பயன்படுத்தப்படும்.சாலை ஓரங்கள், சாலை மத்திய பகுதியில், ஜீப்ரா கிராசிங் குறிப்பிட, பயன்படுத்தும் நிறங்கள் பயன்படுத்தப்படும். இந்த நிறம், இரவு நேரத்திலும், பளிச்சென தெரியும். அதிக நாட்கள் இருக்கும்.சாலைகளின் மீது பெயர்களை எழுதும் பணிகள் துவங்கும்.சாலையின் மீதே, பெயர் எழுதுவது, நாட்டிலேயே புதிய முயற்சியாகும்.உலகின் வளர்ந்த நாடுகளில், சாலைகளின் மேற்ப்பகுதியில், சாலைகளின் பெயர் எழுதப்பட்டுள்ளது. இதனால் ஓட்டுனர், சாலை பெயரை தெரிந்து கொள்ள, அலைபாய்வது தவிர்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையில், இது போன்று பெயர்களை எழுத, ஆட்சேபம் எழுந்துள்ளது. போக்குவரத்து நெருக்கடி, ஏற்படும் போது, சாலை மீது எழுதப்பட்ட பெயர்கள் தெரியாது. சாலைகளின் மீது, மகான்களின் பெயர் எழுதப்பட்டால், அதை மக்கள் மிதித்துகொண்டு நடமாடுவர். இது அவர்களை அவமதித்ததாக இருக்கும் என, பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE