பெங்களூரு; கொரோனா தடுப்பூசி மருந்து போடுவது தொடர்பான, உத்தரவுக்காக, தனியார் மருத்துவமனைகள் காத்திருக்கின்றன.நாடு முழுவதும், வரும், 16 முதல், கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி துவங்குகிறது. இது தொடர்பாக, கர்நாடகா, தனியார் மருத்துவமனைகள், நர்சிங்ஹோம்கள் சங்கத்தலைவர் பிரசன்னா, நேற்று கூறியதாவது:கொரோனா தடுப்பூசி வினியோகிக்க, தனியார் மருத்துவமனைகள், அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளன. ஊழியர்களுக்கு பயிற்சியளித்துள்ளன. அரசின் உத்தரவுக்காக, காத்திருக்கிறோம்.100க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட, தனியார் மருத்துவமனைகள், தடுப்பூசி போடும் மையங்களாகின்றன.முதற்கட்டமாக, அவரவர் ஊழியர்களுக்கு, தடுப்பூசி போடப்படும். அரசின் உத்தரவுப்படி, பெயர் பதிவு செய்து கொண்ட, சுகாதார ஊழியர்களுக்கு, மருந்து போடப்படும்.வரும் நாட்களில், மூத்த குடிமக்கள் உட்பட, மற்றவர்களுக்கு, மருந்து போடப்படும். அனைத்து மருத்துவமனைகளிலும், மருந்து பாதுகாக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.தனியார் மருத்துவமனை ஊழியர்களுக்கு, காணொலி காட்சி மூலம், மாநில அரசு பயிற்சியளித்துள்ளது. பயிற்சி பெற்ற ஊழியர்கள், மற்ற ஊழியர்களுக்கு, பயிற்சியளிப்பர்.யஷ்வந்த்பூரின், கொலம்பியா ஏஷியா மருத்துவனையில், 750 பேர், மருந்து பெற பெயரை பதிவு செய்துள்ளனர். இம்மருத்துமனையில், தடுப்பூசி போட, மூன்று அறைகள், தயார் நிலையில் உள்ளது.தடுப்பூசி தரும் போது, பெங்களூரு மாநகராட்சியின் மேற்பார்வையாளர்; மூன்று டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள்; இரண்டு செக்யூரிட்டி கார்டுகள் இருப்பர். தனியார் மருத்துவமனைகளுக்கு, எப்போது தடுப்பூசி கிடைக்கும் என்பது தெரியவில்லை. ஆனாலும், தயார் நிலையில் உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE