பெங்களூரு நகரின், ஆனந்த்ராவ் சதுக்கத்திலுள்ள குளிர்சாதன சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள, 6.47 லட்சம், 'கோவிஷீல்ட்' எனும் கொரோனா தடுப்பூசி மருந்து, இன்று தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.இதற்கிடையில், புனேவிலிருந்து லாரி மூலம், 1.47 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்து கொண்ட, 13 பெட்டிகள், நேற்று காலை, பெலகாவி வந்தன. சுகாதார துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.இவ்வேளையில் போலீஸ் பேண்ட் வாசித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த மருந்துகள், விஜயபுரா, பாகல்கோட்டை, கொப்பால், கதக், உத்தர கன்னடா, ஹாவேரி, தார்வாட் ஆகிய மாவட்டங்களுக்கு, வினியோகிக்கப்படும்.பெலகாவியில், 180 தடுப்பூசி மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு, ஒவ்வொரு மையத்திலும், 100 பேருக்கு செலுத்தப்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE