பெங்களூரு; வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும், 16, 17 ஆகிய இரண்டு நாட்களில், கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக, வரும், 16 ல், கர்நாடகா வருகிறார்.அன்றைய தினம், காலை, 11:30 மணிக்கு, விமானம் பெங்களூரு வரும் அவர், ஹெலிகாப்டர் மூலம், நேரடியாக ஷிவமொகா மாவட்டம், பத்ராவதி செல்கிறார்.அங்கு, அதிரடிப்படை புதிய மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு, பூமி பூஜையில் பங்கேற்கிறார். பின்னர், மீண்டும் ஹெலிகாப்டர் மூலம், எச்.ஏ.எல்., விமான நிலையம் வருகிறார்.தொம்மலுார், எம்.ஜி.சாலை வழியாக, மாலை 5:00 மணிக்கு விதான் சவுதாவுக்கு வந்து, வெவ்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின், மூன்றாம் மாடியில் உள்ள, முதல்வர் அலுவலகம் சென்று பார்வையிடுகிறார்.இதை தொடர்ந்து, விதான் சவுதாவின் மாநாட்டு அரங்கில், உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அன்றைய தினம் இரவு, ரேஸ்கோர்ஸ் சாலையிலுள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்குகிறார்.மறுநாள், 17, காலை, 9:30 மணிக்கு, பெங்களூரிலிருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு, காலை, 10:30 மணிக்கு பெலகாவி சென்றடைகிறார். விமான நிலையத்திலிருந்து, ராணுவ ஹெலிகாப்டர் மூலம், பாகல்கோட்டை செல்கிறார்.அங்கு, பா.ஜ., அமைச்சர் முருகேஷ் நிரானிக்கு சொந்தமான சர்க்கரை ஆலையில், எத்னால் உற்பத்தி திட்டத்தை துவக்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சிக்கு பின், மீண்டும் ஹெலிகாப்டர் மூலம், 1:15 மணிக்கு பெலகாவி செல்கிறார்.நகரின், கே.எல்.இ., மருத்துவமனையை பார்வையிடுகிறார். மாலை, 4:10 மணி முதல், மாலை, 5:30 மணி வரை, மாவட்ட உள்விளையாட்டு அரங்கில், அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்கிறார்.இதன் பின், சில மாதங்களுக்கு பின் கொரோனாவால் மறைந்த, மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் அங்கடி வீட்டுக்கு, மாலை 5:40 மணிக்கு சென்று, அவரது குடும்பத்தினரிடம் துக்கம் விசாரிக்கிறார்.அங்கிருந்து, தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு செல்லும் அவர், மாலை, 6:10 மணி முதல், இரவு, 7:20 மணி வரை, கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசிக்கிறார். இதன் பின், இரவு, 7:30 மணிக்கு, பெலகாவி, சாம்ப்ரா விமான நிலையத்திலிருந்து, டில்லி புறப்பட்டு செல்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE