பெங்களூரு; கொரோனா தடுப்பூசி மருந்து போட, நாடு முழுவதும் தயாராக உள்ள நிலையில், இம்மருந்தால் ஏற்படும் பின் விளைவு ஏற்பட்டால், அதை எதிர்கொள்ள, மருத்துவ வல்லுனர்கள் தயாராகின்றனர்.கொரோனா தடுப்பூசி மருந்து, கர்நாடகாவுக்கு வந்துள்ளது. மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து, வரும், 16 முதல் கொரோனா பணியாளர்களுக்கு, தடுப்பூசி போட, கர்நாடக அரசு தயாராகிறது.கொரோனா தடுப்பூசி பெற்ற பின், சிறு, சிறு பின்விளைவுகள் ஏற்படலாம் என, மருந்து தயாரிப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது.சோதனை முறையில், மருந்து பெற்றுக்கொண்ட சிலருக்கு, காய்ச்சல், உடற் சோர்வு தென்பட்டது. தடுப்பூசி போட்ட இடத்தில், வலியிருப்பதாக சிலர் கூறினர்.எனவே, தடுப்பூசி போடும் முன், போட்ட பின் மேற்கொள்ள வேண்டிய, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில், வல்லுனர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.கொரோனா ஆலோசனை கமிட்டியும், 'தடுப்பூசி பெற்ற பின், உடனடியாக சுகாதார அதிகாரிகளிடம், தெரிவிக்க வேண்டும்' என அறிவுறுத்தியுள்ளனர்.வல்லுனர்கள் கூறியதாவது:கொரோனா தடுப்பூசி தயாரிக்க, முட்டைக்கரு பயன்படுத்தவில்லை. எனவே, முட்டை ஒவ்வாமை உள்ளவர்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி பெற்ற பின், அதிகமாக மதுபானம் அருந்தக்கூடாது. இது நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கக்கூடும்.இதை மனதில் கொண்டே, தடுப்பூசி பெறும் நபர்கள், சில வாரம் மதுபானம் அருந்த வேண்டாம் என, ரஷ்யா அரசு ஆலோசனை கூறியது. நாங்களும், இதே சிபாரிசை செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE