பசு வதை தடுப்பு சட்டத்தில்இரு வழக்குகள் பதிவு

Added : ஜன 14, 2021
Share
Advertisement
பெங்களூரு: பசு வதை தடுப்பு சட்டத்தின் கீழ், கர்நாடகத்தில் முதன் முறையாக, இரு வழக்கு பதிவாகியுள்ளது.கர்நாடகா அரசின், பசுவதை அவசர தடை சட்டத்துக்கு, சமீபத்தில், கவர்னர் வஜுபாய் வாலா ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, இச்சட்டம் அரசாணையானது. இதனால், மாட்டிறைச்சி விற்பது சட்டப்படி குற்றமாகும்இந்நிலையில், சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட

பெங்களூரு: பசு வதை தடுப்பு சட்டத்தின் கீழ், கர்நாடகத்தில் முதன் முறையாக, இரு வழக்கு பதிவாகியுள்ளது.கர்நாடகா அரசின், பசுவதை அவசர தடை சட்டத்துக்கு, சமீபத்தில், கவர்னர் வஜுபாய் வாலா ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, இச்சட்டம் அரசாணையானது. இதனால், மாட்டிறைச்சி விற்பது சட்டப்படி குற்றமாகும்இந்நிலையில், சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், சட்ட விரோதமாக, நேற்று முன்தினம், கால்நடைகள்கடத்தப்படுவதாக தகவல் வந்தது.இதையடுத்து, வாகனத்தை தடுத்து நிறுத்திய போலீசார், ஒருவரை கைது செய்தனர்.* தட்சிண கன்னடா கைமனா கிராமத்தில், கால்நடைகள் கடத்தி செல்லப்பட்ட வாகனத்தை தடுத்து நிறுத்திய சிலர், ஓட்டுனரை தாக்கி, கால்நடைகளை போலீசில் ஒப்படைத்தனர். காயமடைந்த ஓட்டுனர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இரு சம்பவத்திலும், கால்நடைகளை கடத்தி இருவர் மீது மீது பசு வதை தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X