குரோம்பேட்டை; மார்கழி பஜனை நிறைவை ஒட்டி, மூத்த குடிமக்கள் நலச்சங்கத்தினர், பெருமாள் கோவிலில், ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடத்தினர்.ஆன்மிக மாதம் என அழைக்கப்படும் மார்கழி மாதத்தில், அதிகாலையில் கோலம் போடுவது, வீதி வீதியாக பஜனை நடத்துவது என்பது, காலம் காலமாக நடந்து வருகிறது. நாகரிக உலகில், அவை மெல்ல மறைந்தாலும், சில இடங்களில், பஜனைகளை பார்க்க முடிகிறது.அந்த வகையில், குரோம்பேட்டையில், மூத்த குடிமக்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்தோர், ஆண்டுதோறும், மார்கழி மாதத்தில், பஜனை நிகழ்ச்சியை தவறாமல் நடத்தி வருகின்றனர்.இந்தாண்டும், மார்கழி முதல் நாளில் துவங்கி, நேற்று வரை, தினமும் அதிகாலை, 5:30 முதல், 7:00 மணி வரை, பஜனை நடத்தினர்.இந்நிலையில், மார்கழி பஜனை நிறைவு பெற்றதை அடுத்து, பேரியம்மன் நகரில் உள்ள பெருமாள் கோவிலில், நேற்று காலை, ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி நடத்தினர். அதில், பஜனை கோஷ்டியினர், அப்பகுதி மக்கள் என, ஏராளமானோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE