சென்னை; அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டத்தை குறைக்கவும், சென்னை மாநகராட்சி சுகாதார நிலையங்களில் அவர்கள் சிகிச்சை பெறுவதற்கு ஏற்பவும் நடவடிக்கை மேற்கொள்ள, நிபுணர்கள் அடங்கிய மேம்படுத்துதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.ஆலோசனைசென்னை மாநகராட்சியில், 140 நகர்ப்புற சுகாதார நிலையங்கள், 100 படுக்கை வசதியுடன் கூடிய, 16 சமுதாய நல மையம் மற்றும் மகப்பேறு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், புதிய இடங்களில், மருத்துவமனைகளை உருவாக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையங்களில், புறநோயாளிகள் பிரிவை அதிகரிக்க, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பரிந்துரைகளை அளிக்க, நிபுணர்கள் அடங்கிய மேம்படுத்துதல் குழுவை அமைத்து, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.இந்த குழுவில், சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், இணை கமிஷனர் திவ்யதர்ஷினி, மாநகர நல அலுவலர் ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலர் ஹேமலதா, பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி, கூடுதல் நல மற்றும் டாக்டர்கள், அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தோர் இடம் பெற்றுள்ளனர்.குழுவின் முதல் ஆலோசனை, சமீபத்தில், மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. அதில், சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க, செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.மக்கள் ஆர்வம்மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில், நான்கு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள் உள்ளன. அதை சுற்றி, மாநகராட்சி சுகாதார நிலையங்கள் உள்ளன. ஆனாலும், காய்ச்சல், இருமல், சளி போன்ற சாதாரண பிரச்னைகளுக்கும், நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி இருந்தாலும், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவே, மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், மாநகராட்சி சுகாதார நிலையங்களில் போதிய கட்டமைப்பு இருந்தாலும், பொதுமக்களின் வருகை குறைவாகவே உள்ளது. குழு அமைப்புஎனவே, மாநகராட்சி சுகாதார நிலையங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அங்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக பணிகளை மேற்கொள்ள, நிபுணர்கள் அடங்கிய மேம்படுத்துதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் பரிந்துரைப்படி, வருங்காலங்களில் மாநகராட்சி சுகாதார நிலையங்கள், பொதுமக்கள் சிகிச்சை பெறும் வகையில் பிரதானவையாக உருவாகும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE