சென்னை; துாய்மை நகர பட்டியலில், சென்னை மாநகராட்சி முன்னிலை வகிக்க, தங்களது கருத்துக்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை சார்பில், ஆண்டுதோறும் துாய்மை நகர கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.இந்தாண்டுக்கான கணக்கெடுப்பு, தற்போது துவங்கி உள்ளது. பொதுமக்கள், சென்னை குறித்த தங்களது கருத்துக்களை, www.swachhsurvekshan2021.org/citizenfeedback என்ற இணையதளத்திலும், 'சுவெச்சத்தா' மற்றும் 'எஸ்.எஸ்.2021வோட் பார் யுவர் சிட்டி' என்ற செயலிகள் வாயிலாகவும், 1969 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.இதன் வாயிலாக, துாய்மை நகர பட்டியலில், சென்னை மாநகராட்சி முன்னிலை வகிக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE