சென்னை; சென்னையில், மாசு ஏற்படுத்தும் வகையில், எரிக்க முயன்ற, 2,600 கிலோ பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால், போகி பண்டிகையை ஒட்டி, காற்று மாசு ஏற்படவில்லை என, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.இது குறித்து, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சென்னையில், போகி பண்டிகைக்கு முந்தைய நாள் மாலை துவங்கி, அதிகாலை வரை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி, காவல் துறையினர் அடங்கிய, 32 குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் தடை செய்யப்பட்ட மற்றும் மாசு ஏற்படுத்தும், பிளாஸ்டிக், டயர்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.அவை, கும்மிடிப்பூண்டியில் உள்ள, டயர் மறுசுழற்சி தனியார் ஆலைக்கு அனுப்பப்பட்டது.காற்றின் தரம் ஆய்வு செய்ததில், ஒரு கன மீட்டரில், கந்தக - டை - ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு ஆகிய வாயுக்களின் அளவு, அனுமதிக்கப்பட்ட தர அளவான, 80 மைக்ரோ கிராமுக்கு, உட்பட்டு இருந்தது.மேலும், காற்றில் கலந்துள்ள நுண்துகள்களின் அளவு குறைந்தபட்சமாக, 52 மைக்ரோ கிராம் முதல், 102 மைக்ரோ கிராம் வரை இருந்தது.அதிகபட்சமாக அம்பத்துாரில், 241 ஆக இருந்தது. மேலும், சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதி மக்களுக்கு, குப்பையை எரிக்க வேண்டாம் என, ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக, அங்கு புகைமண்டலம் ஏற்படவில்லை.குறிப்பாக, சென்னையில் குறைந்த ஈரப்பதம், மிதமான வெப்பநிலை, காற்றின் வேகம் காரணமாக, காற்று மாசு ஏற்படவில்லை.இதனால், தொலைதுார காணும் தன்மை நன்றாக இருந்தது. விமான புறப்பாடு மற்றும் வருகை போக்குவரத்தில் எவ்வித இடையூறும் ஏற்படவில்லை.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE