சென்னை; 'எதிர்கால மற்றும் விருப்ப வர்த்தகம்' எனும், 'எப் அண்டு ஓ' என்ற தலைப்பிலான புது வசதியை, பே.டி.எம்., மணி நிறுவனம், அதன் தளத்தில் நேற்று அறிமுகப்படுத்தியது.நாட்டின், உள்நாட்டு டிஜிட்டல் நிதி சேவை தளமாக, பே.டி.எம்., நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம், அதன், 'பே.டி.எம்., மணி' தளத்தில், 'எப் அண்டு ஓ' எனும், 'எதிர்கால மற்றும் விருப்ப வர்த்தகம்' என்ற, புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.இதனுடன், பங்கு வர்த்தகம், நேரடி மியூச்சுவல் பண்ட், டிஜிட்டல் தங்கம் உள்ளிட்ட, பல்வேறு சேவைகளை ஏற்கனவே வழங்கி வருகிறது.தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த தளத்தில், மேற்கொள்ளப்படும், அனைத்து எதிர்கால மற்றும் விருப்ப வர்த்தகத்திற்கு, எந்த ஒரு உறுதியும், ஒப்பந்தமும் வழங்காமல், ஒரு வர்த்தகத்திற்கு, 10 ரூபாய் தரகு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த வசதியின் வாயிலாக, அடுத்த, 18 முதல் 24 மாதங்களில், நாள் ஒன்றுக்கு, 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு விற்று முதல் மற்றும், தினமும், 10 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, நிறுவன தலைமை செயல் அதிகாரி வருண் ஸ்ரீதர் கூறியதாவது: பே.டி.எம்., தளம், சூப்பர் பாஸ்ட் அனுபவம், எளிய குறுக்கீடு, உறுதித்தன்மை உறுதி செய்யும் கண்காணிப்பு உட்பட, பல்வேறு அம்சங்கள் நிறைந்தது. 70 லட்சம் பயனாளர்கள், பே.டி.எம்., மணியில் உள்ளனர்.இதில், 50 சதவீதம் புதிய வாடிக்கையாளர்கள், மியூச்சுவல் பண்ட் மற்றும் பங்கு முதலீட்டில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இவர்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்தவர்கள். 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான மக்கள், டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்துஉள்ளனர்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE