பொது செய்தி

தமிழ்நாடு

மானாமதியில் பிரபலமான சுக்கு காபி கடை

Added : ஜன 14, 2021
Share
Advertisement
மாவட்டம், திருப்போரூர் அடுத்த மானாமதியின் அடையாளமாக, 50 ஆண்டு கால சுக்குகாபி கடை உள்ளது.இங்கு, எருமை பாலில், வெல்லம், ஏலக்காய், சுக்கு உள்ளிட்டவை சேர்த்து போடப்படும் சுக்கு காபி, அப்பகுதியில் புகழ் பெற்றது. சுற்று வட்டாரங்களில் இருந்து, பாத்திரங்களில் வாங்கி செல்கின்றனர்.அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள், வி.ஐ.பி.,க்கள் என, பலரும் இங்கு வந்து,

மாவட்டம், திருப்போரூர் அடுத்த மானாமதியின் அடையாளமாக, 50 ஆண்டு கால சுக்குகாபி கடை உள்ளது.இங்கு, எருமை பாலில், வெல்லம், ஏலக்காய், சுக்கு உள்ளிட்டவை சேர்த்து போடப்படும் சுக்கு காபி, அப்பகுதியில் புகழ் பெற்றது. சுற்று வட்டாரங்களில் இருந்து, பாத்திரங்களில் வாங்கி செல்கின்றனர்.அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள், வி.ஐ.பி.,க்கள் என, பலரும் இங்கு வந்து, சுக்கு காபி குடித்து செல்கின்றனராம்.திருப்போரூர் சுற்று வட்டாரத்தில் நடக்கும் சினிமா படப்பிடிப்பின்போது, கலைஞர்களுக்கு வாங்கிச் செல்லப்படுகிறது. நடிகர்கள் இங்கு வந்து ருசிப்பதும் உண்டு. மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணியர் மற்றும் வெளி மாநிலத்தோர், இக்கடையின் பிரபலத்தை அறிந்து, சுக்கு காபி அருந்த வருகின்றனர். கடை நடத்தும்குணசேகர் கூறியதாவது:என் தாயார், 50 ஆண்டுக்கு முன் துவங்கிய கடை இது. நானும், தம்பியும், 40 ஆண்டுகளாக நடத்துகிறாம். கடைக்கு, பல வி.ஐ.பி.,க்கள் வருவது மகிழ்ச்சி. இருந்தாலும், உள்ளூர் மக்களே அதிகம்.இவ்வாறு, அவர் கூறினார்
-நமது நிருபர் -.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X