பண்டிகையன்று, உச்சி முதல் பாதம் வரை டிப் - டாப்பாக இருப்பதையே நாம் அனைவரும் விரும்புவோருக்கு, சில மேக்-அப் டிப்ஸ் பரிந்துரைக்கிறார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா. தலைமுடி பொலிவாக வேண்டுமென நினைப்பவர்கள், அதற்கென இருக்கும் ஸ்பா ட்ரீட்மென்ட் எடுத்துக்கொள்ளலாம். இவர்களில், வறண்ட தலைமுடி இருப்பவர்கள் பிரத்யே கெரடின் ட்ரீட்மென்ட் செய்து கொள்ளலாம். பண்டிகை நாளுக்கு முன்பேவும் முகத்துக்கு பிரத்யேகமாக ஆக்ஸிப்ளீச்,ஃபேஷியல் / டீடாக்ஸ் ஃபேஷியல் / கொலேஜன் ஃபேஷியல் செய்துக்கொள்ளவும். கூடுதலாக புருவத்துக்கு த்ரெடிங் செய்துக்கொள்வது, முகத்திலிருக்கும் கூடுதல் முடிகளை நீக்கிக்கொள்வது போன்றவையெல்லாம் செய்யும்போது, முகம் பொலிவாகும். பண்டிகை நாள்களில் கண்களுக்கு மேக்-அப் போடும்போது, மஸ்காராவோடு சேர்த்து ஐ-ஷேடோவும் போட்டுக்கொள்வது சிறப்பு. இதில் உங்கள் ஆடை நிறத்தோடு ஒத்துப்போகும் ஐ-ஷேடோவை போட்டுக்கொள்வது, உங்களை கூடுதல் அழகாக காட்டும். பண்டிகைக்கு சில தினங்களுக்கு முன் கைகளுக்கு மேனிக்யூரும், கால்களுக்கு பெடிக்க்யூரும் செய்யலாம். சுயமாக இதை செய்துக்கொள்ள விரும்புபவர்கள் வீட்டிலேயேசூடான சோப் தண்ணீர், எலுமிச்சை மற்றும் உப்பு கலந்து கை - கால்களை ஊறவைத்து, பின் கழுவிக்கொள்ள வேண்டும். பண்டிகையன்று மேக் - அப் மட்டுமன்றி நறுமணத்திலும் அதிக ஆர்வம் காட்டுவது அவசியம். ஆகவே, அன்றைய தினம் நல்ல பெர்ஃயூம் மற்றும் டியோட்ரண்ட் பயன்படுத்தவும். அதில் டியோட்ரண்ட்டை மட்டும் புத்தாடை அணிவதற்கு முன்பே, அக்குளில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE