பொது செய்தி

தமிழ்நாடு

அவனியாபுரத்தில் சீறிப்பாய்ந்த காளைகள் ; வீறுகொண்ட வீரர்கள்

Updated : ஜன 14, 2021 | Added : ஜன 14, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
மதுரை: பொங்கல் திருநாளை முன்னிட்டு நடக்கும் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழா இன்று (14 ம்தேதி) காலை மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடந்தது. அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர். முதன்முதலாக அவனியாபுரம் பாலகுருநாதன் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.விழா


மதுரை: பொங்கல் திருநாளை முன்னிட்டு நடக்கும் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழா இன்று (14 ம்தேதி) காலை மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடந்தது.



latest tamil news




அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர். முதன்முதலாக அவனியாபுரம் பாலகுருநாதன் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

விழா துவங்கும் போது டோக்கன் வாங்காத நபர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதிகாரிகள் பேச்சு நடத்தி அவர்களை வெளியேற்றினர்.




700க்கும் மேற்பட்ட மாடுகளும் , 420 வீரர்களும் இந்த போட்டியில் பங்கெடுக்கின்றனர்.
வீரர்கள் உற்றசாகமாக சீறிப்பாயும் காளைகளை பிடித்தனர்.



latest tamil news




8 சுற்றுகள் நடந்த ஜல்லிக்கட்டில், 520 காளைகள் பங்குபெற்றன. 420 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கினர். மாட்டின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர், பார்வையாளர் என 58 பேர் காயமடைந்தனர்.
சிறந்த வீரர்களாக திருநாவுக்கரசு மற்றும் விஜய் ஆகியோர் தேர்வு பெற்றனர். சிறந்த காளையாக கார்த்திக் என்பவரது காளை தேர்வானது.

இந்த ஜல்லிக்கட்டை காங்கிரஸ் எம்.பி., ராகுல், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
15-ஜன-202104:25:26 IST Report Abuse
J.V. Iyer ராகுல்ஜியை மாடுபிடிக்க விட்டிருக்கலாம்
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜன-202123:26:28 IST Report Abuse
முக்கண் மைந்தன் மொளகாப்பொடியெ கண்ணுல தூவி, வால முறுக்கி, (டிண்குவில) ஈட்டியால குத்தி உட்டதாலதான் காளைங்க "உட்டாப்போதும்"னு சீறி பாயிதுங்க
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
14-ஜன-202116:16:17 IST Report Abuse
S.Baliah Seer சும்மா வாலைப் பிடிப்பவனெல்லாம் வீரனாம்.
Rate this:
14-ஜன-202117:50:49 IST Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா )நீ குண்டு வைப்பவன தானே வீரன்னு புகழுவ...
Rate this:
Pavithra - Bengaluru,இந்தியா
14-ஜன-202122:16:11 IST Report Abuse
Pavithraஇங்க மட்டும் என்ன வாழுதாம்? வெள்ளைக்காரனுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதி வாழ்நாளெல்லாம் விசுவாசமாய் இருப்பேன்னு சொன்னவர் தான் உங்கள் சித்தாந்த பிதா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X