புதுடில்லி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், நடிகர் ரஜினி உள்ளிட்டோர் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை, இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மக்கள், வீடுகளை தூய்மைப்படுத்தி, வண்ணக்கோலமிட்டும், பொங்கல் வைத்து வழிபாடு நடத்துகின்றனர்.இந்நிலையில், மோடி, ராகுல், ரஜினி உள்ளிட்டோர் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தி:
தமிழ்ச் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள். தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை இது. நல்ல உடல் நலமும் வெற்றிகளும் பெறுவோமாக. இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும்.
தமிழ்ச் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள். தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை இது. நல்ல உடல் நலமும் வெற்றிகளும் பெறுவோமாக. இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும்.
— Narendra Modi (@narendramodi) January 14, 2021
<
ராகுல் வாழ்த்து செய்தி:
அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். உங்களுடன் தைப் பொங்கல் கொண்டாட இன்று தமிழகம் வருகிறேன். மதுரையில் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கிறேன்.
பிரிட்டன் பிரதமர்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் டுவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
வணக்கம் என தமிழில் கூறி தொடர்ந்து போரிஸ் ஜான்சன் ஆங்கிலத்தில் கூறியதாவது: நம்முடைய அருமையான பிரிட்டன் தமிழ் சமூகத்தினர், உலகம் முழுவதும் பரந்துள்ள தமிழ் சமூகத்தினர் அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துகள்.உங்கள் நண்பர்கள், குடும்பத்தாருடன் சேர்ந்திருக்கும் நாளாக இது அமையட்டும். இன்னும் கொண்டாடவும், எதிர்நோக்கி இருக்கவும் நிறைய இருக்கிறது என நம்புகிறேன். தித்திப்பான பொங்கல் வைப்பதோடு இல்லாமல், அனைவரும் மகிழ்ச்சியாக இந்த நாளை கொண்டாடுவீர்கள். பாரம்பரியமாக தைத்திருநாள் அறுவடையை வரவேற்கும் நாளாக கொண்டாடப்படுகிறது.பிரிட்டன் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்பவர்களாக, பள்ளிகளில் ஆசிரியர்களாக, மருத்துவமனைகளில் முக்கியப்பொறுப்புகளிலும், நோயாளிகளை கனிவுடன் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர்கள் பிரிவிலும் தமிழ் சமூகத்தினர் இருக்கின்றனர்.
தமிழர்களின் பங்களிப்பு அளப்பரியது. மிகப்பெரிய மாற்றத்தை செய்திருக்கிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.இந்த பூமியில் வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும் ஒரு குடும்பத்தை வளர்ப்பதற்கும் மிகப்பெரிய இடமாக இந்த தேசத்தை மாற்றுவதற்கான நம் திட்டங்களை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம்.
அருமையான தமிழ் சமூகத்திற்கு எனது பெரு நன்றிகளை தெரிவித்து பொங்கல் பண்டிகையையும், அடுத்து வருகிற நாட்களையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் வாழ்த்துகிறேன். பானையில் பொங்கும் இனிப்பான பொங்கலை போன்று மகிழ்ச்சியும், செழிப்பும் ஆண்டு முழுவதும் இருக்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினி
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE