பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு உழவர் சந்தையில் 20 டன் காய்கறி விற்பனை

Added : ஜன 14, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு, சம்பத் நகர் உழவர் சந்தையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்று ஒரே நாளில், 20 டன் காய்கறி விற்பனையானது. ஈரோடு, சம்பத்நகரில் செயல்படும் உழவர் சந்தை, மாவட்ட அளவில் பெரியது. வெளி மார்க்கெட்டை விட, இங்கு காய்கறிகளின் விலை மலிவாக கிடைக்கிறது. விடுமுறை, பண்டிகை நாட்களில் காய்கறி விற்பனை இருமடங்காகும். இன்று (14ல்) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில்,

ஈரோடு: ஈரோடு, சம்பத் நகர் உழவர் சந்தையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்று ஒரே நாளில், 20 டன் காய்கறி விற்பனையானது. ஈரோடு, சம்பத்நகரில் செயல்படும் உழவர் சந்தை, மாவட்ட அளவில் பெரியது. வெளி மார்க்கெட்டை விட, இங்கு காய்கறிகளின் விலை மலிவாக கிடைக்கிறது. விடுமுறை, பண்டிகை நாட்களில் காய்கறி விற்பனை இருமடங்காகும். இன்று (14ல்) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், காய்கறிக்கு நல்ல விலை கிடைக்கும் என, எதிர்பார்ப்பில் விவசாயிகள், போகி பண்டிகையான நேற்று, உழவர் சந்தைக்கு அதிகளவில் காய்கறிகளை கொண்டு வந்தனர். காய்கறிகளை வாங்க, அதிகாலை மக்கள் கூட்டம் அலைமோதியது. சந்தைக்கு வரத்தான, 20 டன் காய்கறி, ஐந்து லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது என, உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர். 104 விவசாயிகள், 3,800 வாடிக்கையாளர்கள் சந்தைக்கு வந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X