பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

Added : ஜன 14, 2021
Share
Advertisement
ஈரோடு: பொங்கல் பண்டிகையை கொண்டாட, ரயிலில் செல்லும் பயணிகள், ரயில்வே ஸ்டேஷனில் குவிந்தனர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, இன்று கொண்டாடப்படுகிறது. இதை தங்கள் உறவினர், நண்பர்கள், குடும்பத்தினருடன் கொண்டாட, ஈரோடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வசிப்பவர்கள், ஆண்டுதோறும் தங்கள் சொந்த ஊர் செல்வது வழக்கம். ஆனால், இந்தாண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சொந்த

ஈரோடு: பொங்கல் பண்டிகையை கொண்டாட, ரயிலில் செல்லும் பயணிகள், ரயில்வே ஸ்டேஷனில் குவிந்தனர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, இன்று கொண்டாடப்படுகிறது. இதை தங்கள் உறவினர், நண்பர்கள், குடும்பத்தினருடன் கொண்டாட, ஈரோடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வசிப்பவர்கள், ஆண்டுதோறும் தங்கள் சொந்த ஊர் செல்வது வழக்கம். ஆனால், இந்தாண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சொந்த ஊர் செல்வது கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன், கோவையில் இருந்து நாகர்கோவில் வரை முன்பதிவு பெட்டிகள் கொண்ட, சிறப்பு ரயில் தினமும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதில் மகிழ்ச்சியடைந்த தென் தமிழக மக்கள், முன்பதிவு செய்தனர். நேற்று, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு முன்பதிவு செய்த பயணிகள், ரயில் பயணம் மேற்கொண்டனர். இதனால், ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் கூட்டம் நேற்று காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X