பொது செய்தி

தமிழ்நாடு

போலி முகநூல் கணக்கில் பண மோசடி: ஈரோடு எஸ்.பி.,யிடம் இன்ஜினியர் புகார்

Added : ஜன 14, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோட்டில், இன்ஜினியர் பெயரில், போலி முகநூல் கணக்கு துவங்கி, அவரது நண்பர்களிடம் நூதன முறையில் பண மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது.ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே, நல்ல கவுண்டன்பாளையம், பாண்டியன் வீதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 36. இவர், ஈரோடு எஸ்.பி. தங்கதுரையிடம் அளித்த புகார் மனு: நான் தனியார் நிறுவன இன்ஜினியர். என் முகநூல் கணக்கில் இருந்த போட்டோவை

ஈரோடு: ஈரோட்டில், இன்ஜினியர் பெயரில், போலி முகநூல் கணக்கு துவங்கி, அவரது நண்பர்களிடம் நூதன முறையில் பண மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது.


ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே, நல்ல கவுண்டன்பாளையம், பாண்டியன் வீதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 36. இவர், ஈரோடு எஸ்.பி. தங்கதுரையிடம் அளித்த புகார் மனு: நான் தனியார் நிறுவன இன்ஜினியர். என் முகநூல் கணக்கில் இருந்த போட்டோவை பயன்படுத்தி, போலியான முகநூல் கணக்கு துவங்கிய மர்ம நபர்கள், என் இணைப்பில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட நண்பர்களுக்கு, மெசஞ்சர் மூலம் அவசர தேவைக்கு பணம் வேண்டும் என, குறுந்தகவல் அனுப்பி உள்ளனர். இதை நம்பிய சில நண்பர்கள், அதில் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் பணம் அனுப்பி உள்ளனர். சிலர் என்னை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது போலி முகநூல் கணக்கில், மோசடி நடப்பது தெரியவந்தது. உடனடியாக, ஈரோடு சைபர் க்ரைம் போலீசில் புகார் தெரிவித்து, போலி முகநூல் கணக்கை முடக்கினேன். என் நண்பர் தியாகராஜன், 15 ஆயிரம் ரூபாயை, மோசடி நபரின் வங்கி கணக்கிற்கு அனுப்பியது தெரியவந்தது. இன்னும் பலர், அந்த கணக்கிற்கு பணம் அனுப்பி இருக்கலாம் என சந்தேகிக்கிறேன். போலி முகநூல் கணக்கு துவங்கி மோசடி செய்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X