பொது செய்தி

தமிழ்நாடு

'அ.தி.மு.க., - பா.ஜ., ஒரு இடம் கூட வர முடியாது': 8 வழிச்சாலை விவசாயிகள் சாபம்

Added : ஜன 14, 2021
Share
Advertisement
பனமரத்துப்பட்டி: 'அ.தி.மு.க., - பா.ஜ., ஒரு இடம் கூட வர முடியாது' என, 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் சாபமிட்டனர்.சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை, நிலவாரப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, நாழிக்கல்பட்டி, பாரப்பட்டி வழியாக அமைக்க, நில அளவீடு செய்யப்பட்டுள்ளது. அத்திட்டத்துக்கு, நிலத்தை வழங்க, விவசாயிகள் மறுத்து, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு,

பனமரத்துப்பட்டி: 'அ.தி.மு.க., - பா.ஜ., ஒரு இடம் கூட வர முடியாது' என, 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் சாபமிட்டனர்.
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை, நிலவாரப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, நாழிக்கல்பட்டி, பாரப்பட்டி வழியாக அமைக்க, நில அளவீடு செய்யப்பட்டுள்ளது. அத்திட்டத்துக்கு, நிலத்தை வழங்க, விவசாயிகள் மறுத்து, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு, வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி, 'துக்க பொங்கல்' கடைப்பிடிக்க, விவசாயிகள் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில், நேற்று காலை, பாரப்பட்டி ஊராட்சி, கூமாங்காட்டில், ஆடு, மாடுகளுடன், விவசாயிகள் திரண்டு, கையில் கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். அதில், எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், நடவடிக்கை இல்லாததால், மூன்றாம் ஆண்டாக, பொங்கலை கொண்டாட முடி யவில்லை. வீட்டில், கறுப்பு கொடி கட்டி, துக்க பொங்கல் கடைப்பிடிக்கிறோம். என்ன நடக்கும் என தெரியாததால், வீடு, தோட்டம், கிணற்றை பராமரிக்க முடியவில்லை. திட்டத்தை கைவிடக்கோரி, சட்டசபையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். பார்லிமென்ட் தேர்தலில் என்ன நடந்ததோ, அதே மாதிரி சட்டசபை தேர்தலில் நடக்கப்போகுது. ஒரு இடம் கூட, அ.தி.மு.க., - பா.ஜ., வர முடியாது. அக்கட்சிகளுக்கு ஓட்டுப்போடாதீர்கள் என, பிரசாரம் செய்து, விவசாயத்தை ஆதரிக்கும் கட்சிக்கு ஓட்டுப்போடுவோம். மத்திய, மாநில அரசுகள், தேர்தலுக்கு முன், திட்டத்தை கைவிட்டால், அக்கட்சிகளுக்கு ஓட்டுப் போடுவோம். மீண்டும் ஆட்சி அமைக்கலாம். இல்லையெனில், நாங்கள் இன்று துக்க பொங்கல் கொண்டாடுகிறோம். தேர்தலுக்கு பின், நீங்கள் துக்கத்துடன் வீட்டுக்கு போவீர்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X