பொது செய்தி

தமிழ்நாடு

27,800 'டோஸ்' தடுப்பூசி: 14 சிறப்பு முகாமில் ஏற்பாடு

Added : ஜன 14, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், ஆத்தூர் சுகாதார மாவட்டங்களில், 14 சிறப்பு முகாம்களில், 27 ஆயிரத்து, 800 'டோஸ்' கொரோனா தடுப்பூசி போடும் பணி, வரும், 16ல் தொடங்கும். சேலம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலக வளாகம், மண்டல குளிர்பதன கிடங்கில், 59 ஆயிரத்து, 800 'டோஸ்' கொரோனா தடுப்பூசி மருந்து வரப்பெற்று, இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அதை, கலெக்டர் ராமன், ஆய்வு செய்த பின் கூறியதாவது: சேலம் மண்டலத்துக்கு,

சேலம்: சேலம், ஆத்தூர் சுகாதார மாவட்டங்களில், 14 சிறப்பு முகாம்களில், 27 ஆயிரத்து, 800 'டோஸ்' கொரோனா தடுப்பூசி போடும் பணி, வரும், 16ல் தொடங்கும். சேலம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலக வளாகம், மண்டல குளிர்பதன கிடங்கில், 59 ஆயிரத்து, 800 'டோஸ்' கொரோனா தடுப்பூசி மருந்து வரப்பெற்று, இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அதை, கலெக்டர் ராமன், ஆய்வு செய்த பின் கூறியதாவது: சேலம் மண்டலத்துக்கு, 59 ஆயிரத்து, 800 'டோஸ்' தடுப்பூசி மருந்து வரப்பெற்றுள்ளது. அவை, சுகாதார மாவட்டங்கள் முறையே, சேலத்துக்கு, 22 ஆயிரத்து, 900; ஆத்தூர், 4,900; நாமக்கல், 8,700; தர்மபுரி, 11 ஆயிரத்து, 800; கிருஷ்ணகிரி, 11 ஆயிரத்து, 500 'டோஸ்', தனித்தனியே அனுப்பப்படும். சேலம், அரசு மருத்துவமனைகளில், முன்கள பணியாளர் - 8,617, தனியார் மருத்துவமனை களப்பணியாளர் - 12 ஆயிரத்து, 177; ஆத்தூரில், அரசு முன்கள பணியாளர் - 2,919, தனியார் முன்கள பணியாளர் - 1,605 என, மாவட்டத்தில், 25 ஆயிரத்து, 318 பேருக்கு, வரும், 16ல் நடக்க உள்ள சிறப்பு முகாமில், தடுப்பூசி போடப்படும். அதற்காக, 0.5 மில்லி சிரிஞ்சிகள், ஒரு லட்சத்து, 29 ஆயிரத்து, 900 தயாராக வைக்கப்பட்டுள்ளன. சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மேட்டூர் தலைமை மருத்துவமனை, இடைப்பாடி, ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர் அரசு மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட, தம்மம்பட்டி, தலைவாசல், பனமரத்துப்பட்டி, மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம், காடையாம்பட்டி சுகாதார நிலையங்கள், காரிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், குமாரசாமிப்பட்டி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் என, 14 மையங்களில் தடுப்பூசி போடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X