சேலம்: சேலம் மேற்கு சட்டசபை தொகுதி, அய்யம்பெருமாம்பட்டி ஊராட்சியில், 50 பயனாளிக்கு, அரசின் விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் விழா நடந்தது. மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., வெங்கடாஜலம், பயனாளிகளுக்கு, பசுக்களை வழங்கினார். அதேபோல், சேலம், தோ.கோனகாபாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், 150 மாணவ, மாணவியருக்கு, எம்.எல்.ஏ., வெங்கடாஜலம், அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். தொடர்ந்து, ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை சார்பில், போத்தனூரில், 8.7 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்.
முன்னதாக, கொண்டப்பநாயக்கன்பட்டியில், 132 பயனாளிக்கு விலையில்லா ஆடுகள், அதற்காக கூரை அமைக்க, 2,100 ரூபாய் காசோலையை வழங்கினார். இதையடுத்து, கோட்டமேட்டில், சரபங்கா கிளையில், 1.60 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் தடுப்பணை பணியை பார்வையிட்டு, விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். ஏ.வி.ராஜு, பிரவீன்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE