பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாருடன் பொங்கல்; எஸ்.பி.,யால் உற்சாகம்

Added : ஜன 14, 2021
Share
Advertisement
சேலம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போலீசாரின் மன உளைச்சல், அழுத்தத்தை குறைக்க, விளையாட்டு போட்டிகளுடன் கொண்டாட, எஸ்.பி., - கமிஷனர்களுக்கு, டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டார். சேலம் மாவட்ட ஆயுதப்படையில், போட்டிகளை, எஸ்.பி., தீபா கானிகேர் தொடங்கி வைத்தார். நேற்று, எஸ்.பி., அலுவலக வளாகத்தில், அதன் ஊழியர்கள் நடத்திய பொங்கல் விழாவில் பங்கேற்ற எஸ்.பி., பெண்களுடன் சேர்ந்து, பொங்கல்

சேலம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போலீசாரின் மன உளைச்சல், அழுத்தத்தை குறைக்க, விளையாட்டு போட்டிகளுடன் கொண்டாட, எஸ்.பி., - கமிஷனர்களுக்கு, டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டார். சேலம் மாவட்ட ஆயுதப்படையில், போட்டிகளை, எஸ்.பி., தீபா கானிகேர் தொடங்கி வைத்தார். நேற்று, எஸ்.பி., அலுவலக வளாகத்தில், அதன் ஊழியர்கள் நடத்திய பொங்கல் விழாவில் பங்கேற்ற எஸ்.பி., பெண்களுடன் சேர்ந்து, பொங்கல் வைத்து உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து, ஊழியர்களை ஒரே இடத்தில் அமரச்செய்து, அவரே, குழு புகைப்படம் எடுத்தார். பின், பெண்கள், ஆண்களுக்கான கயிறு இழுக்கும் போட்டி, பானை உடைத்தலை தொடங்கி வைத்து, அவரும் பங்கேற்றார். எஸ்.பி.,யும் இணைந்து பொங்கலை கொண்டாடியதால், ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, இன்று, எஸ்.பி., பரிசு வழங்குகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X