ஆத்தூர்: கூலமேட்டில் இன்று, மாடு உரிமையாளர், வீரர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
கூலமேட்டில் ஜல்லிக்கட்டு விழா நடத்துவது குறித்து, ஆத்தூர், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. அதில், ஆர்.டி.ஓ., துரை பேசியதாவது: 'கொரோனா' பரவலால், மாடுபிடி வீரர்கள், மாடு உரிமையாளர்கள், அவருடன் வரும் உதவியாளர்கள், விழா குழுவினர், அனைத்து துறை அலுவலர்கள், கொரோனா பரிசோதனை செய்த பின்தான் அனுமதிக்கப்படுவர். ஜன., 14ல்(இன்று), கூலமேட்டில் கொரோனா பரிசோதனை மருத்துவ முகாம் நடக்கும். பார்வையாளர் உள்பட அனைவரும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகளின் உரிமையாளர்கள், வீரர்கள் குறித்த பட்டியலை, வரும், 16ல் வழங்க வேண்டும். 17ல், கலெக்டர் அனுமதிக்கும் நேரத்தில், விழாவை நடத்தி முடிக்க வேண்டும். உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் தெரிவித்துள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஆத்தூர் தாசில்தார் அன்புசெழியன், டி.எஸ்.பி., இம்மானுவேல்ஞானசேகர், மருத்துவம், கால்நடை, வருவாய், போலீசார் துறையினர், ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் பங்கேற்றனர்.
அரசிதழில் அறிவிப்பு: ஜன., 15 முதல், 31 வரை, கூலமேட்டில், ஜல்லிக்கட்டு நடத்திக்கொள்ள, தமிழக அரசின், கால்நடை பராமரிப்பு, மீன்வளத்துறை சார்பில், நேற்று, அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE