பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் நிலத்துக்கு பட்டா? மக்கள் ஏமாற வேண்டாம்

Added : ஜன 14, 2021
Share
Advertisement
மகுடஞ்சாவடி: தமிழக திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், 2015 ஜன.,13ல், சேலம் மாவட்டம், சித்தர்கோவிலில் உள்ள சித்தேஸ்வரசுவாமி கோவிலில், தமிழக அரசின் உத்தரவின்படி சுகாதாரம், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கண்டறிய, அரசு அதிகாரிகளுடன் கூட்டாய்வு மேற்கொண்டார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கை எடுத்த நிலையில், மீண்டும் தொய்வு

மகுடஞ்சாவடி: தமிழக திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், 2015 ஜன.,13ல், சேலம் மாவட்டம், சித்தர்கோவிலில் உள்ள சித்தேஸ்வரசுவாமி கோவிலில், தமிழக அரசின் உத்தரவின்படி சுகாதாரம், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கண்டறிய, அரசு அதிகாரிகளுடன் கூட்டாய்வு மேற்கொண்டார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கை எடுத்த நிலையில், மீண்டும் தொய்வு ஏற்பட்டதால், அவர், கோவில் வளாக பகுதியில் களஆய்வு மேற்கொண்டார்.


இது குறித்து, ராதாகிருஷ்ணன் கூறியதாவது: கஞ்சமலை, சித்தேஸ் சுவாமி கோவில் பகுதிகளில் சுகாதாரம் இன்றி காணப்படுகிறது. 2015ல், பல்வேறு துறை அதிகாரிகளுடன், கூட்டாய்வு மேற்கொண்ட பின், ஒரு சில மாதங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துறைரீதியான நடவடிக்கை எடுத்தனர். தற்போது, பெண்கள் குளிக்கவும், உடை மாற்றவும் போதிய இடம் அளிக்காதது வேதனையளிக்கிறது. மேலும், கிணறுகளில் குளிக்க கோவில் நிர்வாகம் பக்கெட் வாளிகளை, சமையல் செய்யும் பெண்மணியிடம் ஒப்படைத்ததோடு மட்டுமின்றி, அர்ச்சனை டிக்கெட்டை ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். சித்தர்கோவில் அடிவாரத்தில், கோவிலுக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலம் அமைந்த சத்யா நகர் பகுதியில், 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பட்டா பெற்று தருவதாக கூறி, சிலர் வசூலில் ஈடுபடுகின்றனர். எனவே, அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். ஆகவே, பணம் கொடுத்து மக்கள் ஏமாறவேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X