சேலம்: சேலம், சின்னேரி வயல்காடு, சினிமா நகரை சேர்ந்தவர் பாண்டியன், 36. இவர் மீது, தமிழகம் முழுதும், 40க்கும் மேற்பட்ட திருட்டு, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த, 2003, 2008, 2009, 14, 15, 16, 2017 என, ஏழுமுறை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இவரது கூட்டாளி, பொன்னம்மாபேட்டையை சேர்ந்த கச்சா, 28. இவர் மீது, சேலம் மாநகர போலீஸ் ஸ்டேஷன்களில், 20க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், 2012, 2014, 2018ல், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இருவரும், தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டதால், எட்டாம் முறை பாண்டியனை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, சூரமங்கலம் போலீசார் பரிந்துரைத்தனர். அதேபோல், கச்சாவை, நான்காம் முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, அம்மாபேட்டை போலீசார் பரிந்துரைத்தனர். அதையேற்று, போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டதால், சேலம் மத்திய சிறையில் உள்ள இருவர் மீதும், குண்டாஸ் பாய்ந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE