பொது செய்தி

தமிழ்நாடு

வாணியாறு அணையில் இருந்து 135 கன அடி நீர் வெளியேற்றம்

Added : ஜன 14, 2021
Share
Advertisement
பாப்பிரெட்டிப்பட்டி: வாணியாறு அணையிலிருந்து, நேற்று வினாடிக்கு, 135 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த முள்ளிக்காட்டில், வாணியாறு அணை உள்ளது. சேர்வராயன் மலைத்தொடரின் அடிவாரத்தில், அமைந்துள்ள இந்த அணைக்கு, ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து, நீர்வரத்து உள்ளது. பருவமழையால், கடந்த நவ., 14ல், அணையின் மொத்த கொள்ளளவான, 65.27 அடியில், அணை

பாப்பிரெட்டிப்பட்டி: வாணியாறு அணையிலிருந்து, நேற்று வினாடிக்கு, 135 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த முள்ளிக்காட்டில், வாணியாறு அணை உள்ளது. சேர்வராயன் மலைத்தொடரின் அடிவாரத்தில், அமைந்துள்ள இந்த அணைக்கு, ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து, நீர்வரத்து உள்ளது. பருவமழையால், கடந்த நவ., 14ல், அணையின் மொத்த கொள்ளளவான, 65.27 அடியில், அணை நீர்மட்டம், 63 அடியாக உயர்ந்தது. இதையடுத்து, அணை பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் வாணியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், பெய்த தொடர்மழையால் கடந்த, 10ல், அணைக்கு, 150 கன அடி நீர்வரத்து வந்தது. இந்நிலையில், நேற்று அணைக்கு, 135 கன அடியாக நீர்வரத்து சரிந்தது. தொடர்ந்து, 135 கன அடி நீரும் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டது. ஏற்கனவே, வெங்கடசமுத்திரம், ஆலாபுரம் உள்ளிட்ட, ஐந்து ஆயக்கட்டு ஏரிகள் நிரம்பிய நிலையில், தற்போது, உபரிநீர் வாணியாறு மற்றும் கல்லாற்றில் செல்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X