அரூர்: பொங்கலை முன்னிட்டு, புழுதியூர் வாரச்சந்தையில், 75 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகின.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த புழுதியூர் வாரச்சந்தைக்கு, பொங்கலை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 5:00 மணி முதலே, ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். மேலும், கலப்பின மற்றும் ஜெர்சி வகையை சேர்ந்த, 120 மாடுகள் மற்றும் கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கலப்பின மாடு ஒன்று, 22 ஆயிரம் முதல், 60 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. அதேபோல், வளர்ப்பு மாட்டுக்கன்று ஒன்று, 7,000 முதல், 23 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. நேற்று நடந்த சந்தையில், மாடுகளின் வரத்து அதிகரித்து, 35 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என, வியாபாரிகள் தெரிவித்தனர். ஆடு விற்பனை குறித்து, பொம்மிடியை சேர்ந்த வியாபாரி ராமசாமி கூறியதாவது: பொங்கலை முன்னிட்டு, சந்தைக்கு, 900க்கும் மேற்பட்ட, ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 10 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று, 6,200 முதல், 6,700 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், ஒவ்வொரு ஆடும், 400 முதல், 700 ரூபாய் கூடுதல் விலைக்கு விற்பனையானது. சந்தையில், 75 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE