பொது செய்தி

தமிழ்நாடு

'கேடி லிஸ்டில்' உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி அறிவுரை

Added : ஜன 14, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், பழைய கேடி பட்டியலில், 40 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், தற்போது மனம் திருந்தி வாழ்கின்றனர். இதே போன்று அவர்கள், சட்ட விரோத செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுறுத்தும் நிகழ்ச்சி, தர்மபுரி மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட கேடி பட்டியலில் உள்ள, 40 பேருக்கும், மனம் திருந்தி வாழ்வதற்காக, பொங்கல் பரிசாக வேஷ்டி,

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், பழைய கேடி பட்டியலில், 40 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், தற்போது மனம் திருந்தி வாழ்கின்றனர். இதே போன்று அவர்கள், சட்ட விரோத செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுறுத்தும் நிகழ்ச்சி, தர்மபுரி மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட கேடி பட்டியலில் உள்ள, 40 பேருக்கும், மனம் திருந்தி வாழ்வதற்காக, பொங்கல் பரிசாக வேஷ்டி, துண்டு ஆகியவற்றை, ஏ.டி.எஸ்.பி., குணசேகரன், டி.எஸ்.பி., அண்ணாத்துரை உள்ளிட்டோர் வழங்கினர். மேலும், தங்களது வாழ்க்கை மற்றும் குடும்பத்தினரின் கவுரவத்தை காக்க, கேடி பட்டியலில் உள்ளவர்கள், மீண்டும் எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடாமல், தற்போது உள்ளதுபோல் தங்களது நடவடிக்கைகளை மாற்றி கொள்ள வேண்டும் என, அவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X