தர்மபுரி: தர்மபுரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பாக, உழவர் சந்தை அருகே உள்ள, தி.மு.க., அலுவலகத்தில், சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளரும், தர்மபுரி எம்.எல்.ஏ.,வுமான தடங்கம் சுப்பிரமணி தலைமை வகித்தார். சமத்துவ பொங்கல் விழாவில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர். பாரம்பரிய முறைப்பட்டி நடந்த பொங்கல் விழாவில், தடங்கம் சுப்பரமணி விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், 200க்கும் மேற்பட்டோருக்கு, இலவச வேட்டி, சேலை வழங்கினார். இதில், அகமத், அப்த்துல்லா மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் அன்பழகன், தங்கமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE