சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் நிறுவன அதிகாரிக்கு வெட்டு: போலீசார் விசாரணை

Added : ஜன 14, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் அருகே, பிளிப்கார்ட் நிறுவன பாதுகாப்பு பிரிவு, மூத்த இயக்குனரை, பிளேடால் வெட்டிய மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.கர்நாடகா மாநிலம், மாலூரை சேர்ந்தவர் மஞ்சுநாத், 36; பிளிப்கார்ட் நிறுவனத்தின், பாதுகாப்பு பிரிவில், மூத்த இயக்குனராக பணியாற்றி வருகிறார்; கடந்த, 11 மாலை, கர்னூர் பகுதியில் உள்ள பிளிப்கார்ட் சேமிப்பு கிடக்கில் ஆய்வு நடத்தி விட்டு, பார்ச்சுனர்

ஓசூர்: ஓசூர் அருகே, பிளிப்கார்ட் நிறுவன பாதுகாப்பு பிரிவு, மூத்த இயக்குனரை, பிளேடால் வெட்டிய மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.


கர்நாடகா மாநிலம், மாலூரை சேர்ந்தவர் மஞ்சுநாத், 36; பிளிப்கார்ட் நிறுவனத்தின், பாதுகாப்பு பிரிவில், மூத்த இயக்குனராக பணியாற்றி வருகிறார்; கடந்த, 11 மாலை, கர்னூர் பகுதியில் உள்ள பிளிப்கார்ட் சேமிப்பு கிடக்கில் ஆய்வு நடத்தி விட்டு, பார்ச்சுனர் காரில் வெளியே வந்தார். அப்போது, சேமிப்பு கிடங்கு வாசலில், காரை மறித்த மர்ம நபர், இந்தி மொழியில் மஞ்சுநாத்தை ஆபாசமாக பேசியதுடன், தன்னை வேலையில் இருந்து எப்படி எடுக்கலாம் எனக்கூறி, தன்னிடம் இருந்த பிளேடால், காரில் அமர்ந்திருந்த மஞ்சுநாத்தின் கையில் வெட்டினார். இதில் காயமடைந்த அவர், ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக, நேற்று முன்தினம், மத்திகிரி போலீசில், மஞ்சுநாத் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X