பொது செய்தி

தமிழ்நாடு

ஜவ்வாதுமலை, சாத்தனூர் அணையில் பாதுகாப்பு

Added : ஜன 14, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், பொங்கல் பண்டிகைக்கு, சுற்றுலாத்தலங்களில் மக்கள் கூடுவதை தடுக்க, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக, எஸ்.பி., அரவிந்த் கூறினார். திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி., அலுவலத்தில், போலீசார் பொங்கல் விழாவை கொண்டாடினர். தொடர்ந்து, எஸ்.பி., அரவிந்த் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, 2020ம் ஆண்டுகளில், பதிவான, 37 கொலை வழக்குகளில், 35

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், பொங்கல் பண்டிகைக்கு, சுற்றுலாத்தலங்களில் மக்கள் கூடுவதை தடுக்க, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக, எஸ்.பி., அரவிந்த் கூறினார். திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி., அலுவலத்தில், போலீசார் பொங்கல் விழாவை கொண்டாடினர். தொடர்ந்து, எஸ்.பி., அரவிந்த் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, 2020ம் ஆண்டுகளில், பதிவான, 37 கொலை வழக்குகளில், 35 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள், 78 பேர் கைது செய்யப்பட்டனர், 24 ஆயிரத்து, 603 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 24 ஆயிரத்து, 507 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக, பொங்கல் பண்டிகைக்காக, சுற்றுலா தலங்களில் மக்கள் கூட தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாதுமலை, சாத்தனூர் அணை, செண்பகத்தோப்பு அணை, மிருகண்டாநதி அணை, குப்பனத்தம் அணை ஆகிய பகுதிகளில், கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் பொதுமக்கள் கூடுவதை தடுப்பர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X