வந்தவாசி: கொரோனா ஊரடங்கால், நிறுத்தி வைத்திருந்த மருதாடு ஆட்டு சந்தை, நேற்று மீண்டும் தொடங்கியதில், 40 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில், பல ஆண்டுகளாக, வாரச்சந்தை நடந்து வருகிறது. இங்கு, ஆடு, மாடு, கோழி மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. கொரோனோ பரவல் காரணமாக, கடந்த மார்ச் முதல், வாரச்சந்தை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், வியாபாரிகள், விவசாயிகள் நலன் கருதி, வாரச்சந்தை நேற்று மீண்டும் துவங்கியது. இதில், மருதாடு, கடைசிகுளம், காவேரிப்பாக்கம், வழூர், மற்றும் வந்தவாசி, அச்சரப்பாக்கம், பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஆடுகளை கொண்டு வந்திருந்தனர். வழக்கமாக, வாரந்தோறும், 20 லட்சம் ரூபாய் அளவுக்கு, சந்தையில் வியாபாரம் நடக்கும். நேற்று நடந்த சந்தையில், பொங்கலை முன்னிட்டு, 40 லட்சம் ரூபாய் அளவுக்கு, வியாபாரம் நடந்ததாக சந்தை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். கொரோனோ பரவலால் நிறுத்தி வைத்திருந்த சந்தை, மீண்டும் இயங்க துவங்கியதால், ஆடு, மாடு வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE