சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

வந்துவிட்டது 'திரவக் கண்ணாடி'

Added : ஜன 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
நுாற்றாண்டுகள் கண்ட கண்ணாடி தொழில்நுட்பம். இருந்தாலும், அதில் இன்னமும் புதுமைகள் தென்பட்டபடியே இருக்கின்றன. ஜெர்மனியின் கான்ஸ்டான்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 'திரவக் கண்ணாடி' என்ற புதிய பொருள் நிலையை உருவாக்கி வெற்றி கண்டுள்ளனர்.பொதுவாக வெப்பத்தால் உருகி, திரவ நிலையை அடையும் பொருட்கள், குளிர்ச்சியடைகையில், படிப்படியாக மறுபடியும் திட நிலைக்குத்
வந்துவிட்டது 'திரவக் கண்ணாடி'

நுாற்றாண்டுகள் கண்ட கண்ணாடி தொழில்நுட்பம். இருந்தாலும், அதில் இன்னமும் புதுமைகள் தென்பட்டபடியே இருக்கின்றன. ஜெர்மனியின் கான்ஸ்டான்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 'திரவக் கண்ணாடி' என்ற புதிய பொருள் நிலையை உருவாக்கி வெற்றி கண்டுள்ளனர்.

பொதுவாக வெப்பத்தால் உருகி, திரவ நிலையை அடையும் பொருட்கள், குளிர்ச்சியடைகையில், படிப்படியாக மறுபடியும் திட நிலைக்குத் திரும்புகின்றன. அப்படி திரும்புகையில், அந்தப் பொருளில் சுதந்திரமாக இயங்கிக்கொண்டிருந்த மூலக்கூறுகள் 'உறைந்து' நின்றுவிட, திட வடிவம் உண்டாகிறது.

ஆனால், திரவக் கண்ணாடியில், மூலக்கூறுகள் முற்றாக உறைந்துவிடாமல், அருகாமையிலுள்ள மூலக்கூறுகளுடன் சற்றே இளக்கமாக இருக்கின்றன. இதனாலேயே அவை திரவ நிலையில் இருப்பது போன்ற தோற்றம் உண்டாகிறது. திரவக் கண்ணாடியின் நடைமுறை பயன்களை கான்ஸ்டான்ஸ் விஞ்ஞானிகள் ஆராயத் தொடங்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
20-ஜன-202104:50:03 IST Report Abuse
J.V. Iyer கொஞ்சம் விபரமாக சொல்லியிருக்கலாமே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X