சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கட்டியைக் கரைக்கும் ஒலி

Added : ஜன 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ரத்தக் குழாய்களில் உறைந்துவிடும் ரத்தத்தை, மருந்து, மாத்திரைகளால் கரைப்பது ஒரு வழி. ஆனால், சில நேரங்களில், நோயாளிகளுக்கு இது பலன் தருவதில்லை. எனவேதான், அமெரிக்காவின், வட கரோலினா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அல்ட்ரா சவுண்டு எனப்படும் மீஒலியை பயன்படுத்தி ரத்தக் கட்டியை கரைப்பதில் வெற்றி பெற்றுள்ளனர்.ரத்தம் கட்டியுள்ள இடத்திற்கு அருகே, நுண்ணிய மீஒலிக்
கட்டியைக் கரைக்கும் ஒலி

ரத்தக் குழாய்களில் உறைந்துவிடும் ரத்தத்தை, மருந்து, மாத்திரைகளால் கரைப்பது ஒரு வழி. ஆனால், சில நேரங்களில், நோயாளிகளுக்கு இது பலன் தருவதில்லை. எனவேதான், அமெரிக்காவின், வட கரோலினா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அல்ட்ரா சவுண்டு எனப்படும் மீஒலியை பயன்படுத்தி ரத்தக் கட்டியை கரைப்பதில் வெற்றி பெற்றுள்ளனர்.

ரத்தம் கட்டியுள்ள இடத்திற்கு அருகே, நுண்ணிய மீஒலிக் கருவியை ஆராய்ச்சியாளர்கள் செலுத்துகின்றனர். பிறகு, 'பெர்ப்ளூரோ கார்பன்' திரவல்த துளிகளை செலுத்தி, மீஒலி அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. பெர்ப்ளூரோ திரவத் துளிகளை, அதிக ஆற்றலுடன் ஒலிகளைகள் அதிரவைத்து, ரத்தக் கட்டியை அக்கருவி கரைத்துவிடுகிறது

மீஒலி, பெர்ப்ளூரோ கார்பன் துளிகள், ரத்தக் கட்டியைக் கரைக்கும் மருந்து, ஆகிய மூன்றும் கலந்த சிகிச்சை நல்ல பலனைத் தருவதாக, வட கரோலினா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புதிய சிகிச்சை முறை, நாள்பட்ட ரத்தக் கட்டிகளைக் கரைப்பதற்கு பயன்படும். அதுமட்டுமல்ல, மீஒலி அதிர்வலைகள், கட்டியைக் கரைக்குமே தவிர, அருகே உள்ள ரத்தக் குழாய் சுவர்களை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. இது கூடுதல் பலன்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
17-ஜன-202110:40:02 IST Report Abuse
Amirthalingam Shanmugam இந்த முறையானது ,இரத்த கட்டிகளை மட்டும்தான் கரைக்க முடியுமா ?கொழுப்புக்கட்டிகளையும் கரைக்க முடியுமா? தெரிந்தவர்கள் கருத்து தெரிவித்தால் நல்லது.நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X